கூடலூரில் கட்டட வேலை செய்த கொத்தனார் தவறி விழுந்து உயிரிழப்பு
தேனி மாவட்டம் கூடலூரில் கட்டட வேலை செய்து கொத்தனார் சாரத்திலிறிந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் கட்டட வேலை செய்து கொத்தனார் சாரத்திலிறிந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் கூடலூர் வார்டு 19, கொத்தனார் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் மாரியப்பன்(56). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.
கூடலூரில் சின்ன கவுண்டர் தெருவில் உள்ள அபிமன்னன் என்பவர் வீட்டில் கட்டட வேலை நடைபெற்று வருகிறது. இங்கு கட்டடம் கட்டும் கொத்தனார் வேலையை மாரியப்பன் செய்து வந்தார்.
செவ்வாய்க்கிழமை மாரியப்பன், கட்டடத்தில் கட்டப்பட்ட சாரத்தில் ஏறி வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு
பின்னந்தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. மேலும் காது, மூக்கு பகுதிகளில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டு தொடர்ந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது.
அருகில் உள்ளவர்கள் மாரியப்பன் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை செய்து, பின்னர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி கூடலூர் காவல் ஆய்வாளர் ஜேம்ஸ் ஜெயராஜ், சார்பு ஆய்வாளர் பாண்டியராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, பிரேத விசாரணைக்கு ஒப்படைத்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.