கிருஷ்ணகிரியில் பணியின் போது உயிர்நீத்த தீயணைப்புத் துறை வீரர்களுக்கு அஞ்சலி
கிருஷ்ணகிரியில் பணியின்போது உயிர் நீத்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் பணியின்போது உயிர் நீத்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு துறையில் தீ விபத்து மற்றும் மீட்பு பணியின் போது உயிர் நீத்த அலுவலர்கள் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்விற்கு கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலர் எம்.மகாலிங்க மூர்த்தி தலைமை வகித்தார். உதவி மாவட்ட அலுவலர் கோ.ராமச்சந்திரன், நிலைய அலுவலர் மோகன் குமார், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் நினைவு சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Advertisement