சென்னையில் 20,000 கரோனா நோயாளிகள்; 10 மண்டலங்களில் பாதிப்பு கடும் உயர்வு
சென்னையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 20,144 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 10 மண்டலங்களில் கடுமையாக உயர்ந்து வருகிறது.
சென்னை: சென்னையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 20,144 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 10 மண்டலங்களில் கடுமையாக உயர்ந்து வருகிறது.
சென்னையில் தேனாம்பேட்டை, அண்ணாநகர் ஆகிய இரு மண்டலங்களில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இதற்கடுத்த இடங்களில் இராயபுரமும், கோடம்பாக்கமும் உள்ளன.
15 மண்டலங்களில், தண்டையார்பேட்டை, இராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி ஆகிய 10 மண்டலங்களிலும் கரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துவிட்டது.
திருவொற்றியூர், மணலி, மாதவரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மட்டுமே ஆயிரத்துக்குள் உள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,144 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவுக்கு 4,344 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மொத்தமாக 2,69,614 பேர் பாதிக்கப்பட்டதில் 2,47,630 பேர் குணமடைந்துள்ளனர்.
மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேனாம்பேட்டை, அண்ணா நகர் ஆகிய இரு மண்டலங்களில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது.
தேனாம்பேட்டையில் அதிகபட்சமாக 2,382 பேரும், அதையடுத்து அண்ணா நகரில் 2,191 பேரும், கோடம்பாக்கத்தில் 1,738 பேரும், ராயபுரத்தில் 1,792 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரம்