முகப்பு
தமிழ்நாடு

திருநங்கையர் நாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திருநங்கையர் தினத்தை முன்னிட்டு திருங்கையர்கள் அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

திருநங்கையர் தினத்தை முன்னிட்டு திருங்கையர்கள் அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட தனது முகநூல் பதிவில், ஆண் - பெண் இரு பாலினத்தவர் போலவே திருநங்கையரும் அனைத்து நிலைகளிலும் சம உரிமை பெற்று வாழ்ந்திட வேண்டும் என்பதை நம் அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் இன்று (ஏப்ரல் 15) திருநங்கையர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

திருநங்கை எனும் சொல்லுக்கு அரசாங்கத்தின் அங்கீகாரத்தை அளித்து அவர்களின் நலன் காக்கத் தனி வாரியம் அமைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அவர் வழியில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் திருநங்கையர் / திருநம்பியர் உரிமைகளைக் காத்து நிற்கும் என்ற உறுதியினை வழங்கி, திருநங்கையர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →