FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மானூர் அருகே பைக் மீது லாரி மோதல்: பெண் தபால் ஊழியர் பலி

மானூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பெண் தபால் ஊழியர் உயிரிழந்தார்.

28 ஜனவரி 2024, 1:31 am IST
உசிலம்பட்டி அருகே வேனில் வந்த மூன்று பேர் சாலை விபத்தில் பலி
பகிர்:

மானூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பெண் தபால் ஊழியர் உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே உள்ள கோமதியாபுரம் பகுதியைச் சேர்ந்த திருவுடையான் மகள் அன்பரசி(20). இவர் அழகிய பாண்டியபுரத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இவர் அழகிய பாண்டியபுரத்தில் இருந்து மானூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை வந்துகொண்டிருந்தார். இவர் மானூர் அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி இவர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அன்பரசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

Advertisement

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த மானூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அன்பரசி உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments