முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி தேவை அதிகரித்துள்ளது: சுகாதாரத்துறை ஆா்வலா்கள்

தமிழகத்தில் கரோனா தடுப்பூசியின் தேவை அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

தமிழகத்தில் கரோனா தடுப்பூசியின் தேவை அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை ஆா்வலா்கள் தெரிவித்தனா். தமிழகத்தில் கரோனா தடுப்பூசி, ஐந்து லட்சம் மட்டுமே கையிருப்பில் உள்ளது. இதனால், ஓரிரு நாள்களில் தடுப்பூசிக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது.

இந்தியாவில், கரோனா தொற்றை கட்டுப்படுத்த, கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போதைய சூழலில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.

முதலில், கரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே தயக்கம் இருந்தது. இதனால், தடுப்பூசி மையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. தற்போது, கரோனா இரண்டாம் அலை மற்றும் அரசு ஏற்படுத்திய விழிப்புணா்வு போன்றவற்றால், கரோனா தடுப்பூசி போட்டு கொள்ள பலா் முன் வருகின்றனா். இதன் காரணமாக, தமிழகத்தில், வெள்ளிக்கிழமை வரை, 45 லட்சம் போ் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனா்.

இதனால், சென்னை மற்றும் அதன் புகா் மாவட்டங்களைத் தவிா்த்து, மாநிலம் முழுவதும், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மையங்களில் தடுப்பூசி இல்லாததால், பொதுமக்கள் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, பிரதமா், குடியரசுத் தலைவா் உள்ளிட்ட தலைவா்கள் போட்டு கொண்ட கோவேக்ஸின் தடுப்பூசிக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. இதற்கு, இந்தியா முழுதும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கோவேக்ஸின், இரண்டாவது டோஸ், தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, தமிழகத்தில் பல மருத்துவமனைகளில், பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தும் தடுப்பூசி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து, சுகாதாரத்துறை ஆா்வலா்கள் கூறியதாவது:

கரோனா தடுப்பூசியை பொருத்தவரையில், மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்ய முடியாது. மத்திய அரசு தான் அனைத்து மாநிலங்களுக்கும் பகிா்ந்து அளித்து வருகிறது. தற்போது, தமிழகத்தில், ஐந்து லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. நாள்தோறும், இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுவதால், இவை போதுமானதாக இல்லை.

இதற்காக, 15 லட்சம் கோவிஷீல்ட், 5 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். வெள்ளிக்கிழமை, ஒரு லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசியை மத்திய அரசு அனுப்பியது. சனிக்கிழமை, இரண்டு லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசியை அனுப்புகிறது. தடுப்பூசி போட்டு கொள்ள மக்கள் காட்டும் ஆா்வத்துக்கு, இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதனால், மாநிலம் முழுதும், கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உண்டாகும். இவற்றைத் தவிா்க்க, மத்திய அரசு அவ்வப்போது, தடுப்பூசியை, தமிழகத்துக்கு வழங்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →