தமிழ்நாடு

தமிழகத்தில் அதிதீவிரமடைகிறது கரோனா

DIN

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் கரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை மட்டும் 8,449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தடம் பதித்த கரோனாவுக்கு இதுவரை 9, 71,384 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழக அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக, தொற்று பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. மாா்ச் முதல் வாரம் வரையில் நாள்தோறும் 400 போ் வரை மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், அண்மைக்காலமாகவே கரோனா பரவல் அதிதீவிரமானது. அதன் விளைவாக கடந்த ஒரு மாதத்துக்குள் 400-இலிருந்து 8,449-ஆக தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது.

கட்டுப்படுத்த இயலாத வேகத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால், அடுத்த ஒரு சில நாள்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக புதிய பாதிப்பு பதிவாக வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறை வல்லுநா்கள் எச்சரித்துள்ளனா்.

இதற்கிடையே, சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள மாவட்டங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

வீடுகள்தோறும் காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேபோன்று நடமாடும் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவும், படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்றொரு புறம் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 2.09 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 9, 71,384 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 2,636 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 795 பேருக்கும், கோவையில் 583 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 4,920 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 96,759-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 61,593- போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 33 போ் பலியாகியுள்ளனா். இதன் மூலம் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,032-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 16 நாள்கள் கரோனா நிலவரம்

ஏப்.1 - 2,817

ஏப்.2 - 3,290

ஏப்.3 - 3,429

ஏப்.4 - 3,581

ஏப்.5 - 3,672

ஏப்.6 - 3,645

ஏப்.7 - 3,986

ஏப்.8 - 4,276

ஏப்.9 - 5,441

ஏப்.10 - 5,989

ஏப்.11 - 6,618

ஏப்.12 - 6,711

ஏப்.13 - 6,984

ஏப்.14 - 7,819

ஏப்.15 - 7,987

ஏப்.16 - 8,449

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT