முகப்பு
தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: மறைந்த விவேக்கிற்கு மாற்றுத்திறனாளிகள் அஞ்சலி

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மன வளர்ச்சிக் குன்றிய மாணவர்கள், மறைந்த திரைப்பட நடிகர் விவேக் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
கூத்தாநல்லூரில் மறைந்த விவேக்கிற்கு மாற்றுத்திறனாளிகள் அஞ்சலி
பகிர்:

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மன வளர்ச்சிக் குன்றிய மாணவர்கள், மறைந்த திரைப்பட நடிகர் விவேக் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

கூத்தாநல்லூர் நகராட்சிக்குள்பட்ட பனங்காட்டாங்குடி மற்றும் சித்தாம்பூர் ஊராட்சி குடிதாங்கிச்சேரி உள்ளிட்ட இரண்டு இடங்களில் மன வளர்ச்சிக் குன்றியோருக்கான பயிற்சிப் பள்ளி அமைந்துள்ளது.

இரண்டு பள்ளிகளிலும் 75 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இப்பள்ளிகளின் நிறுவனர் ப.முருகையன் ஏற்பாட்டின்படி, மறைந்த திரைப்பட நடிகர் விவேக் உருவப்படத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் மகேஸ்வரி முருகையன், பயிற்சியாளர் தேன்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.