உரம் விலை உயர்வைக் கண்டித்து திருச்சியில் விவசாயிகள் மறியல்
உரம் விலை உயர்வைக் கண்டித்தும், மும்முனை மின்சாரம் வழங்கக் கோரியும் திருச்சியில் விவசாயிகள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி: உரம் விலை உயர்வைக் கண்டித்தும், மும்முனை மின்சாரம் வழங்கக் கோரியும் திருச்சியில் விவசாயிகள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பில் திருச்சி, கரூர் புறவழிச்சாலையில் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சமூக சமூக இடைவெளியுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தலுக்கு முன்பு மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்குத் தடையின்றி வழங்கப்படும் என உறுதி அளித்தனர். தேர்தல் முடிந்தவுடன் மின்சாரம் தடையின்றி வழங்குவதை உறுதி செய்யவில்லை. மேலும், உரங்கள் விலையை 54 சதவீதம் உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இதனைக் கண்டித்தும் உரம் விலை உயர்வை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.
Advertisement