தமிழ்நாடு

இரவு நேர ஊரடங்கு: மெட்ரோ சேவையில் மாற்றம்

மெட்ரோ ரயில் சேவை காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும்

DIN

இரவு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 20) முதல் இரவு நேர முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதனையொட்டி இரவு நேரங்களில் பொதுபோக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பகல் நேரங்களில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ, டாக்ஸி போன்றவை இரவு நேரங்களில் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில் தற்போது இரவு நேர ஊரடங்கால் மெட்ரோ ரயில் சேவையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களில் நிமிடத்திற்கு ஒரு ரயில் இயங்கும் என்றும், நெரிசல் குறைவாக உள்ள இடங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT