சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ. 25.56 லட்சம் வசூல்
சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து கடந்த 12 நாள்களில் ரூ. 25.56 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து கடந்த 12 நாள்களில் ரூ. 25.56 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையில் கடந்த ஏப்ரல் 8 முதல் 19 வரை முகக்கவசம் அணியாமல் சென்றதாக 13,320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ. 25.56 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.