தமிழ்நாடு

தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு தொழிலாளர்கள் செல்ல தளர்வு

DIN

தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு வேலைக்கு செல்லும் தோட்டத் தொழிலாளர்களுக்கு தளர்வுகளை இரண்டு மாவட்ட நிர்வாகத்தினர் ஏற்படுத்தியுள்ளனர்.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்ய நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேலான ஆண், பெண் பக்தர்கள் சென்று வருகின்றனர். தற்போது 2 மாநிலங்களிலும் தீவிர கரோனா தடுப்பு பணிகள் நடைபெறுவதால் மாநில எல்லைகளை கடக்க மருத்துவ பரிசோதனை, இ.பாஸ் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதைக் கண்டித்து புதன்கிழமை கம்பமெட்டு மலைச்சாலையில் 500க்கும் மேலான ஆண், பெண் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் வியாழக்கிழமை குமுளி மற்றும் கம்பமெட்டு வழியாகச் செல்லும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கேரளா செல்ல தளர்வு முறை கடைப்பிடிக்கப்பட்டது. சோதனைச்சாவடிகளில் உடனடி இ.பாஸ் மற்றும் கேரளா சென்று வர 48 மணி நேரத்திற்கு மருத்துவ பரிசோதனை இல்லை, அதே நேரத்தில் வெப்ப பரிசோதனை மற்றும் போக்குவரத்து விதி முறைப்படி ஜீப் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பயணிக்க அனுமதி என்ற விதிகள் கடைப்பிடிக்கப்பட்டது. 

இதனால் விவசாய, தோட்ட மற்றும் இதர  தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். வெளியூர் பயணிகளுக்கு மட்டும் மருத்துவ பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT