முகப்பு
தமிழ்நாடு

அவிநாசி: குட்டையில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி பலி

அவிநாசி அருகே சின்னேரிபாளையத்தில் குட்டையில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி வியாழக்கிழமை மதியம் உயிரிழந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
சிறுமியின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்
பகிர்:

அவிநாசி: அவிநாசி அருகே சின்னேரிபாளையத்தில் குட்டையில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி வியாழக்கிழமை மதியம் உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே ராயம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (47). இவரது மகள் கிருத்திகா(14).

இந்நிலையில் இவர் தோழிகளுடன் சின்னேரிபாளையம் பகுதியில் உள்ள அண்ணமார் குட்டையில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக நீரிழ் மூழ்கி, கிருத்திகா உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான வீரர்கள் சிறுமி கிருத்திகா உடலை தேடி வருகின்றனர். இது குறித்து அவிநாசி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.