முகப்பு
தமிழ்நாடு

ஏப்ரல் 25-ல் மெட்ரோ ரயில்கள் இயங்கும்

ஏப்ரல் 25ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
கோப்புப்படம்
பகிர்:

ஏப்ரல் 25ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
இதன்படி ஏப்ரல் 25-ல் மெட்ரோ ரயில்கள் 1 முதல் 2 மணிநேர இடைவெளியில் இயக்கப்படும் என்றும் சென்ட்ரல்-கோயம்பேடு-விமான நிலைய வழித்தடத்தில் 2 மணிநேர இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் சென்ட்ரல்-பரங்கிமலை வழித்தடத்தில் 2 மணிநேர இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும் விம்கோ நகர்-விமான நிலையம் வழித்தடத்தில் 1 மணிநேர இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து இருப்பதால் மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதன்படி செவ்வாய்க்கிழமை (ஏப்.20) முதல் சில புதிய கட்டுப்பாடுகளும், இரவு ஊரடங்கும் அமலுக்கு வந்தது. 
அதேசமயம் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கமும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →