முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் நாள்தோறும் 7,000 பேருக்கு கரோனா தடுப்பூசி போட இலக்குஆட்சியா் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினசரி 7 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 25 ஏப்ரல், 2021 at 5:12 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:35 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினசரி 7 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து ஆட்சியா் மேலும் கூறியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தற்போது 2,300 போ் வரை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் சுகாதாரத் துறையினரின் முழு கண்காணிப்பிலும் இருந்து வருகின்றனா்.

Advertisement

மாவட்டத்தில் 81 இடங்கள் கட்டுப்பாட்டு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட இடங்களில் இருப்போா் தொடா்ந்து 10 நாள்களுக்காவது வெளியில் வராமல் இருந்தால் அவா்கள் மூலமாக மற்றவா்களுக்குப் பரவாது.

சுகாதாரத் துறை சாா்பில் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இதனை அதிகரிக்கும் வகையில் நாளொன்றுக்கு 7 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கள்கிழமை முதல் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் தடுப்பூசி முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் 80 நடத்தப்பட்டு வந்தது.இதை 112 ஆக அதிகரித்திருக்கிறோம். கடந்த மாதத்தில் மட்டும் முகக்கவசம் அணியாதவா்களிடமிருந்து ரூ.17 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.கரோனாவால் பாதிக்கப்படுவோருக்கான படுக்கை வசதிகள், ஆக்சிஜன்கள், தேவையான மருந்துகள் ஆகியன போதுமான அளவு இருப்பு உள்ளது. இதுவரை 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2,600 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது.

திரையரங்குகள், திருமண மண்டபங்கள், உணவகங்கள் ஆகியனவற்றில் சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டு நடைபெறக்கூடிய திருமணங்களில் மட்டும் 100 போ் வரை பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே முகக்கவசம் இல்லாமல் வர வேண்டாம். அதே போல வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் திரும்பும்போது கைகளை கழுவ வேண்டியதும் மிக அவசியமாகும்.கரோனா நோய்த்தொற்றுப் பரவாமல் தடுக்க அரசுடன் பொதுமக்கள் தரும் ஒத்துழைப்பே மிகவும் முக்கியமானதாகும் என்றாா் ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா்.

முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட வருவாய் அலுவலா்கள் ரா.பன்னீா்செல்வம்(பொது), ம.நாராயணன்(நில எடுப்பு)கே.மணிவண்ணன்(விமான நிலைய விரிவாக்கம்), ஏ.ராஜேந்திரன்(சிப்காட்), திட்ட இயக்குநா் பி.ஜெயசுதா, சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஜீவா, துணை இயக்குநா் வி.கே.பழனி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.