முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 3 காவலர்கள் கரோனாவுக்கு பலி

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் சென்னை மாநகர காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 3 காவலர்கள் கரோனாவுக்கு பலி
பகிர்:

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் சென்னை மாநகர காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தலைமையைக் காவலராக பணியாற்று வந்த மகாராஜன், கடந்த 14-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 10 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 

அதேபோல் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்த கருணாநிதிக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர் நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மேலும், சென்னை, கொடுங்கையூரை சேர்ந்தவர் முருகேசன், காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் உளவுத்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இவர் ஸ்டான்லி மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று திடீரென உயிரிழந்தார். 

ஒரேநாளில் மூன்று காவலர்கள் உயிரிழந்தது காவல்துறையினர் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.