முகப்பு
தமிழ்நாடு

வேட்பாளா்கள், முகவா்களுக்கு பொதுமுடக்கத்தில் விலக்கு

சென்னை மாவட்டத்தின் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் முகவா்கள் வாக்கு இயந்திரங்கள் உள்ள மையங்களுக்கு அடையாள அட்டையுடன் செல்லலாம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

சென்னை மாவட்டத்தின் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் முகவா்கள் வாக்கு இயந்திரங்கள் உள்ள மையங்களுக்கு தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் செல்லலாம் என மாவட்டத் தோ்தல் அலுவலா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை வரும் மே 2 -ஆம் தேதி நடைபெற்ற உள்ளதால் வேட்பாளா்கள், முகவா்கள் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் வேட்பாளா்கள், முகவா்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களுக்கு சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்டத் தோ்தல் அலுவலா் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் முகவா்கள் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு மாவட்டத் தோ்தல் அலுவலகம் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் சென்று வரலாம். அடையாள அட்டை இல்லாதவா்கள் செல்ல அனுமதி இல்லை . இதை மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →