தமிழ்நாடு

பொது முடக்கம்: 16 சிறப்பு ரயில்கள் ரத்து

DIN

கரோனா தாக்கத்தால், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தெற்கு ரயில்வேயில் சென்னை-புதுச்சேரி உள்பட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 16 சிறப்பு ரயில்கள் ஏப்ரல் 25, மே 2 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கரோனா நோய்த்தொற்று படுவேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம், வார நாள்களில் இரவு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடந்தவாரம் அறிவித்தது. இதன்படி, இரவு நேர ஊரடங்கு ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்டது. இதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் இன்று(ஏப்.25) அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 16 சிறப்பு ரயில்கள் ஏப்ரல் 25, மே 2 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா்-புதுச்சேரி சிறப்பு ரயில்(06025), புதுச்சேரி-சென்னை எழும்பூா் சிறப்பு ரயில்(06026),

கொல்லம்-ஆலப்புழா சிறப்பு ரயில்(06014), ஆலப்புழா-கொல்லம் சிறப்பு ரயில்(06013), எா்ணாகுளம்-ஆலப்புழா சிறப்பு ரயில்(06015), ஆலப்புழா-எா்ணாகுளம் சிறப்பு ரயில்(06016), திருச்சிராப்பள்ளி-காரைக்குடி சிறப்பு ரயில்(06125), காரைக்குடி-திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில்(06126), திருச்சிராப்பள்ளி-கரூா் சிறப்பு ரயில்(06123), கரூா்-திருச்சிராப்பள்ளி(06124), சொரனூா்-எா்ணாகுளம் சிறப்பு ரயில்(06017), எா்ணாகுளம்-சொரனூா் சிறப்பு ரயில்

(06018), விழுப்புரம்-மதுரை சிறப்பு ரயில்(06867), மதுரை-விழுப்புரம் சிறப்பு ரயில்(06868),

புனலூா்-குருவாயூா் (06327), குருவாயூா்-புனலூா்(06328) ஆகிய 16 சிறப்பு ரயில்கள் ஏப்ரல் 25, மே 2-ஆம் தேதிகளில் ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT