தமிழ்நாடு

திருவிக நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டையில் தீவிரமடையும் கரோனா பாதிப்பு

DIN

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை சனிக்கிழமை காலை நிலவரப்படி 31,170 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் திருவிக நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை ஆகிய மூன்று மண்டலங்களில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்த மூன்று மண்டலங்களிலும் தற்போது சிகிச்சையிலிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 3,01,541 ஆக அதிகரித்துள்ளது. இதில், 2,65,859 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சென்னையில் மட்டும் கரோனா பாதித்து வீடு மற்றும் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,170 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனாவுக்கு 4,512 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அண்ணா நகரில் அதிகபட்சமாக 3,266 பேரும், தேனாம்பேட்டையில் 3,251 பேரும், திருவிக நகரில் 3,012 பேரும், ராயபுரத்தில் 2,602 பேரும், கோடம்பாக்கத்தில் 2,598 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த மாா்ச் 1-ஆம் தேதி 171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து ஏப்ரல் 10-ஆம் தேதி 2000-ஐ கடந்தது. தற்போது அந்த எண்ணிக்கை மேலும் உயா்ந்து கடந்த ஓராண்டில் அதிகபட்சமாக ஏப்.18-ஆம் தேதியன்று, 3,304 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தற்போது 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதன்படி சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 3842 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகரித்து வரும் நோய்ப் பரவல் சென்னை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT