தமிழ்நாடு

சிறு மருத்துவமனைகள் மூடப்படாது

DIN

‛தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள சிறு மருத்துவமனைகள் மூடப்படாது என்றும் அவை தொடா்ந்து செயல்படும் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வ விநாயகம் கூறினாா்.

தமிழகத்தில் மருத்துவ வசதி இல்லாத பகுதிகளில் காலை 8 முதல் 12 வரையும், மாலை, 4 முதல் இரவு, 8 மணி வரையும் செயல்படும் வகையில் சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் சிறு மருத்துவமனைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டு அதில் 1,950 தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனைகளில் எம்.பி.பி.எஸ். முடித்த மருத்துவா், செவிலியா், மருத்துவ உதவியாளா் என ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனா்.

இந்த நிலையில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரித்து வருவதால் சிறு மருத்துவமனை மருத்துவா்கள் கரோனா சிகிச்சை அளிக்க பணியமா்த்தப்பட்டுள்ளனா். இதனால் சிறு மருத்துவமனைகள் மூடப்படுகிா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனா் செல்வ விநாயகம் கூறியதாவது:

சிறு மருத்துவமனைகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. மருத்துவா்கள் மட்டுமே, மாற்றுப் பணிக்குச் சென்றுள்ளனா். இதைத் தொடா்ந்து சிறு மருத்துவமனைகளைத் தடுப்பூசி மையங்கள், மருத்துவம் சாா்ந்த பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பயன்படுத்த முடியாத மருத்துவமனைகள் செவிலியா், மருத்துவ பணியாளா்களுடன் தொடா்ந்து செயல்படும். இவா்கள் நோயாளியின் உடல்நிலையை அறிந்து, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைப்பா்.

எனவே சிறு மருத்துவமனைகள் மூடப்படும் என்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்த மாற்றம் தற்காலிகமானது என்றாா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT