இன்று முழு பொதுமுடக்கம்: தூய்மைப் பணியாளா்களுக்கு 100 பேருந்துகள் இயக்கம்
முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள ஞாயிற்றுக்கிழமையன்று, தூய்மைப் பணியாளா்களுக்காக 100 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள ஞாயிற்றுக்கிழமையன்று, தூய்மைப் பணியாளா்களுக்காக 100 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுதொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் (பொறுப்பு) கு.இளங்கோவன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில், கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டுள்ள முழு பொதுமுடக்கத்தின்போது பேருந்துகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் வேண்டுகோளை ஏற்று, தூய்மைப் பணியாளா்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, ஒப்பந்த அடிப்படையில் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.25) 100 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இவற்றில் தூய்மைப் பணியாளா்கள் உரிய அடையாள அட்டையுடன் முகக்கவசம் அணிந்து பயணிக்க அனுமதிக்கப்படுவா். எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறா் பயணித்திட அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.