முகப்பு
தமிழ்நாடு

புதுவையில் ஒரே நாளில் 11 பேர் பலி

புதுவையில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,008 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

புதுச்சேரி: புதுவையில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,008 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 815 நபர்களுக்கும், காரைக்காலில் 101 நபர்களுக்கும், ஏனாமில் 40 நபர்களுக்கும், மாஹேவில் 52 நபர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 7,288 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 45,243 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும், புதுச்சேரியில் 10 நபர்களும், ஏனாமில் ஒரு நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால் மாநிலத்தில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53,279 ஆக உள்ளது. முதன்முறையாக புதுச்சேரியில் 1,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.