திமுக ஆட்சி அமைந்ததும் ஸ்டெர்லைட் திறக்கப்படாது: மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சி அமைந்ததும் எந்தச் சூழலிலும் ஸ்டெர்லைட் திறக்கப்படாது என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி அமைந்ததும் எந்தச் சூழலிலும் ஸ்டெர்லைட் திறக்கப்படாது என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில், ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், திமுகவின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரி கனிமொழி அவர்களும் பங்கேற்று, கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.
மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம், அதற்கான மின்சாரத்தை வழங்கலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இம்முடிவு தற்காலிகமானதுதான்.
தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகும் நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.