தமிழ்நாடு

சீர்காழி அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் காயம்

DIN

சீர்காழி அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பெண் படுகாயம் அடைந்துள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 42 ராதாநல்லூர் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளது. 1991 ஆம் ஆண்டு கட்டப்பட நிலையில், கடந்த 30 வருடங்களாக எந்தவித பராமரிப்பும் இன்றி சிதிலமடைந்து உள்ளது. 

இந்நிலையில் இக்கிராமத்தில் வசித்து வருபவர் புனிதா. இவர் இரவு வழக்கம் போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது தொகுப்பு வீட்டில் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது. இதில் புனிதாவின் தலையில் பலத்த காயம் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த புனிதாவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். 

மேலும் சீர்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டாரம் முழுவதும் ஆயிரக்கணக்கான அரசின் தொகுப்பு வீடுகள் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது, இதில் வாழும் ஏழை மக்கள் உயிர் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர் எப்பொழுது வேண்டுமானாலும் தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் இதுகுறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டுத் தொகுப்பு வீடுகளை மறுசீரமைப்பு செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT