தமிழ்நாடு

மூணாறில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

DIN

கம்பம்: மூணாறில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் நீலகிரி வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது

இந்தியாவில் புகழ்பெற்ற இரவிகுளம் தேசிய பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நீலகிரி வரையாடுகள் உள்ளன. வரையாடுகளை  பார்ப்பதற்கென்றே இந்தியா மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவார்கள். ஆண்டுதோறும் நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு பணியை கேரள வனத்துறை தொடங்கும்.

இந்த ஆண்டு நீலகிரி வரையாடுகள் கணக்கெடுக்கும் பணியில் 66 வன ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர். கரோனா  தொற்று பரவல் இருப்பதால் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் மட்டும் பங்கேற்றுள்ளனர். வனப்பகுதியை 22 வட்டங்களாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவுக்கு ஒரு வன அலுவலர் 2 ஊழியர்கள் என பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கணக்கெடுப்பு பணிக்கு வன உயிரின சரணாலய காப்பாளர்  வரலட்சுமி, வனத்துறையினருக்கு  முக்கிய குறிப்புகள் கொடுத்து பணியில் ஈடுபடுத்தி உள்ளார்.

கடந்த ஆண்டு கணக்கெடுத்ததில்  723 நீலகிரி வரையாடுகள் 111 புதிய புதிதாக பிறந்த குட்டி வரையாடுகள் மூணாறு பகுதியில் காணப்பட்டது. இந்த ஆண்டு புதியதாக 98  குட்டி வரையாடுகள் பிறந்துள்ளதாக வனத்துறையினர் ஒரு குறிப்பில் கூறியுள்ளனர்.

தற்போது கேரளாவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இரவிகுளம்  தேசிய பூங்காவிற்கு  சுற்றுலாப்பயணிகள் வர தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT