முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் 6 மண்டலங்களில் கரோனா பாதிப்பு தீவிரம்

சென்னையில் திருவிக நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய ஆறு மண்டலங்களிலும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
சென்னையில் 6 மண்டலங்களில் கரோனா பாதிப்பு தீவிரம்
பகிர்:

சென்னையில் திருவிக நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய ஆறு மண்டலங்களிலும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி புள்ளி விவரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,18,614 ஆக உள்ளது. இவர்களில் 2,82,849 பேர் குணமடைந்துள்ளனர். 4,629 பேர் பலியாகிவிட்டனர்.

தற்போது கரோனா பாதித்து மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 31,136 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 3,210 பேரும், அண்ணாநகரில் 3,165 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

இதற்கடுத்த இடங்களில் கோடம்பாக்கத்தில் 2,935 பேரும், அம்பத்தூரில் 2,832 பேரும், திருவிகநகரில் 2,599 பேரும், அடையாறில் 2,503 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்தமுள்ள 31 ஆயிரம் நோயாளிகளில், இந்த ஆறு மண்டலங்களில் மட்டும் சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

மண்டலவாரியாக நிலவரம்..

முழு கட்டுரையைப் படிக்க →