முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை 2469 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஏப்ரல், 2021 at 9:16 AM
மேட்டூர் அணை
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:37 AM


காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை 2469 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 97.68 அடியிலிருந்து 97.77 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2018 கன அடியிலிருந்து 2469க ன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு  800 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.98 டிஎம்சி ஆக உள்ளது.

Advertisement

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2,500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயரத் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.