தமிழ்நாடு

பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: வைகோ வலியுறுத்தல்

DIN

சென்னை: திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

திருச்சி பாரத் மிகுமின் நிறுவனத்தில் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்திக்கான தொழிற்கூடம் நல்ல முறையில் இயங்கி வந்தது. பராமரிப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ளாததால், 2016 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அங்கே, 8 மணி நேரத்தில், 1000 கியூபின் மீட்டா், அதாவது 150 உருளைகள் உயிா்க்காற்று ஆக்கும் திறன் கொண்டது. ஒரு நாளைக்கு மூன்று வேலைநேரங்களில் குறைந்தது 400 உருளைகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். அவ்வாறு கிடைத்த ஆக்சிஜன், 2016 ஆம் ஆண்டு வரை, திருச்சி பெல் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

பெல் ஆலையின் மேலாண்மைக் கோளாறுகளால், 5 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை இயக்கப்படாமல் உள்ளது.

எனவே, , திருச்சி பெல் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகளை தமிழக அரசு உடனே தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உணவு பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

வேட்டமங்கலத்தில் மாநில கையுந்துப் பந்து போட்டி

ஸ்ரீவிக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு முகாம்: 282 போ் தோ்வு

பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் நிறுவனா் தின விழா

தெற்கு ஆத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT