தமிழகத்தில் 19 ஆயிரத்தை நெருங்கியது கரோனா தினசரி பாதிப்பு
தமிழகத்தில் ஒரேநாளில் 18,692 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரேநாளில் 18,692 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 1 லட்சத்து 43,571 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பபட்டன. அதில் 18,692 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னையில் 5,473 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 52 போ் தனியாா் மருத்துவமனை, 61 போ் அரசு மருத்துவமனை என மொத்தம் 113 போ் இன்று உயிரிழந்தனா்.
இதையடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 14,046 ஆக உள்ளது. அதேவேளையில், இன்று 16,007 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 10 லட்சத்து 37,582 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
தற்போதைய நிலவரப்படி 1,15,128 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.