உசிலம்பட்டியில் விழிப்புணர்வு வாகனப் பிரசார துவக்க விழா
கரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை வராமல் தடுக்க விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் கிராமங்களில் பிரசார துவக்க விழா உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் நடைபெற்றது.
உசிலம்பட்டி: கரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை வராமல் தடுக்க விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் கிராமங்களில் பிரசார துவக்க விழா உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் கரோனா மூன்றாவது அலை வராமல் தடுக்க கிராமங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வாகனங்கள் மூலம் உசிலம்பட்டியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரத்தை உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சு.ரஞ்சனி சுதந்திரம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வம், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மலேசியா பாண்டி தி.மு.க ஒன்றிய செயலாளர் சுதந்திரம் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வபாண்டி, துரைப்பாண்டி, தனலட்சுமி பன்னீர்செல்வம், ரம்யா துரைப்பாண்டி, திமுக மாவட்ட நெசவாளர் அணி லிங்கசாமி மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆட்டோ விழிப்புணர்வு பிரசாரம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒலிபெருக்கி மூலமும் மற்றும் சுகாதாரத் துறை சார்பாக கரோனா மூன்றாவது அலைக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடும் என தெரிவித்தனர்.