முகப்பு
தமிழ்நாடு

வேதாரண்யம் பகுதியில் அதிகரிக்கும் கரோனா: தீவிரமடையும் விழிப்புணர்வு பிரசாரம்

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், விழிப்புணர்வுப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
தாணிக்கோட்டகத்தில் நடைபெற்ற கரோனா பிரசார இயக்கம்
பகிர்:

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், விழிப்புணர்வுப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தாணிக்கோட்டகம் ஊராட்சி சார்பில் விழிப்புணர்வுப் பிரசாரம் இயக்கம் இன்று (ஆக.1) காலை தொடங்கி வைக்கப்பட்டது. 

மாதா கோயில் வளாகத்தில் தொடங்கிய பிரசாரப் பேரணியை ஊராட்சித் தலைவர் ப.முருகானந்தம் தொடங்கி வைத்தார். 

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன், துணைத் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரசாரப் பேரணியில் விழிப்புணர்வுக்காக தலை தெரியாமல் உருவகப்படுத்தப்பட்டவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.