மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்லத் தடை: ககன் தீப் சிங் பேடி
கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்ல மக்களுக்கு அனுமதியில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்ல மக்களுக்கு அனுமதியில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளிலும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி,
கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக கடற்கரைக்குச் செல்ல அனுமதியில்லை. மக்கள் கவனக்குறைவாக இருந்தால் கரோனா 3 ஆவது அலை வரும். எனவே, அத்தியாவசியத் தேவை இருந்தால் மட்டும் மக்கள் வீட்டை விட்டு வௌியே வர வேண்டும்.
திருமண விழாக்களில் கலந்துகொள்ளும்போது தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். விஷேச நாள்களில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே வழிபாடு செய்ய வேண்டும் .
தவிர்க்க முடியாத காரணத்தினால் சென்னையில் 9 இடங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.