வாழப்பாடி அருகே தண்ணீர் தொட்டியிலிருந்த நாகப்பாம்பு பிடிபட்டது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையத்தில் தண்ணீர் தொட்டியில் பதுங்கிக் கொண்டு, மக்களை அச்சுறுத்திய நாகப்பாம்பை வனத்துறை ஊழியர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார்.
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையத்தில் தண்ணீர் தொட்டியில் பதுங்கிக் கொண்டு, மக்களை அச்சுறுத்திய நாகப்பாம்பை வனத்துறை ஊழியர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார். இவருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தில், தூய்மைப்பணியாளர் சேட்டு வீட்டிற்கு அருகே, தண்ணீர் தொட்டியில் நாகப்பாம்பு ஒன்று பதுங்கிக் கொண்டு, இப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து ஊராட்சி செயலர் குமரேசன், மாரியம்மன் புதூர் கிராம வனக்குழு தலைவர் உழவன் இரா. முருகன் வாயிலாக, வாழப்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் உத்தரவின்பேரில், பாம்பு பிடிப்பதற்கான பிரயோக பயிற்சி பெற்ற, வன தோட்டக்காவவர் முத்தையன் சம்பவ இடத்திற்குச் சென்று தண்ணீர் தொட்டியில் பதுங்கி இருந்த நாகப்பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்தார். இந்தப் பாம்பைக் கொண்டு சென்று கோதுமலை காப்புக்காடு வனப்பகுதியில் விட்டார். ஹ
குடியிருப்புப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய நூற்றுக்கும் மேற்பட்ட கொடிய விசமுடைய பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட வனக்காப்பாளர் முத்தையனுக்கு இப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.