முகப்பு
தமிழ்நாடு

சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன்?: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா ஜாமீன் கோரிய வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:49 AM
சிவசங்கர் பாபா (படம்: முகநூல்)
பகிர்:

போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா ஜாமீன் கோரிய வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளிக்கும் தனக்கும் தொடர்பில்லை என ஜாமீன் மனுவில் சிவசங்கர் பாபா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆன்மிகம், தமிழ் சார்ந்த சொற்பொழிவுக்கு மட்டுமே அந்த பள்ளிக்கு சென்றதாக சிவசங்கர் பாபா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்மிக பயணத்திற்காக தில்லி சென்ற தன்னை காவல் துறையினர் கைது செய்ததாகவும் சிவசங்கர் பாபா தரப்பில்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

 கேளம்பாக்கத்தில் உள்ள தனியாா் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, தாளாளா் சிவசங்கா் பாபா மீது சிபிசிஐடி காவல்துறை வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →