புதுச்சேரியில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா தொடக்கம்
புதுச்சேரியில் 75 வது சுதந்திரதின விழாவையொட்டி, 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. துணை நிலை ஆளுநர், முதல்வர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் 75 வது சுதந்திரதின விழாவையொட்டி, 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. துணை நிலை ஆளுநர், முதல்வர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75 வது சுதந்திர திருநாளை முன்னிட்டு, புதுச்சேரி அரசு சார்பில் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்னும் பெயரில் 75,000 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா புதுச்சேரி அருகே பாகூர் கொம்யூனில் உள்ள மனப்பட்டு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
மனப்பட்டு வனத்துறை தோட்டத்தளத்தில், நடைபெற்ற மரம் நடும் விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழசை சௌந்திரராஜன், முதலமைச்சர் என். ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நல அமைப்புகள் பங்கேற்க, மர கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் 13,250 மரக்கன்றுகள் நடப்படுகிறது. அதைத்தொடர்ந்து புதுச்சேரி முழுவதும் மொத்தமாக 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.