முகப்பு
தமிழ்நாடு

சுருளிப்பட்டியில் உலக தாய்ப்பால் வார விழா 

 தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் உலக தாய்ப்பால் வார விழா முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:49 AM
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் உலக தாய்ப்பால் வார விழா முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள், தாய்க்கு ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கமாக கூறப்பட்டது.

அரசு சித்த மருத்துவர் சிராஜுதீன் பேசும்போது, சீம்பாலின் நன்மைகள், தாய்ப்பால் ஊறச்செய்யும் மூலிகைகள், ஊறச்செய்யும் உணவுகள் தாய்ப்பால் கொடுப்பதின் நுட்பங்கள், கொழு கொழு குழந்தைகள் வளர்ப்பதன் நுட்பங்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

கலந்து கொண்ட தாய்ப்பாலூட்டும் மகளிர்களுக்கு அமுக்கரா சூரணம்  சதாவரி லேகியம், நன்கு தாய்ப்பால் ஊறுவதற்காக வழங்கப்பட்டது. மேலும்  குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி பெற உரை மாத்திரை வழங்கப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி வெங்கடேசன்,  சுகாதார ஆய்வாளர் அமரேசன்,  கிராம சுகாதார செவிலியர் பழனியம்மாள், ரஷ் பவுண்டேஷன் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →