அவிநாசி அருகே தாமரைக்குளத்தில் மண் அள்ள சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
அவிநாசியில் நல்லாற்றை சீரமைக்க நிதி ஒதுக்கியும், நீராதாராக் குளமான தாமரைக்குளத்தில் இருந்து மண் அள்ளுவதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்த
அவிநாசி: அவிநாசியில் நல்லாற்றை சீரமைக்க நிதி ஒதுக்கியும், நீராதாராக் குளமான தாமரைக்குளத்தில் இருந்து மண் அள்ளுவதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவிநாசியின் பிரதான நீராதாரக் குளங்களாங்களாக தாமரைக்குளம், சங்கமாங்குளம் உள்ளிட்டவை உள்ளன. இந்நிலையில், அவிநாசி தாமரைக்குளத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளுவதையறிந்த சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அவிநாசி வருவாய்த்துறையினரிடம் கேட்ட போது, அவிநாசியில் உள்ள நல்லாற்றை சீரமைப்பதற்காக பொதுப்பணித்துறையினர், தாமரைக்குளத்தில் மண் அள்ளுவதாக தகவல் மட்டுமே அளித்தனர். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாமரைக்குளமாக இருந்தாலும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். இருப்பினும் மண் அள்ளுவது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது, அவிநாசியின் இயற்கை வளமான தாமரைக்குளம், சங்கமாங்குளம் உள்ளிட்டவைகளை தூர்வாரி, மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம். குளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள பொதுப்பணித்துறையினரே மண் அள்ளுவது சரியல்ல. மேலும் நல்லாற்றை சீரமைக்க ரூ.4 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தாமரைக்குளத்தில் மண் அள்ளுவது முறையல்ல. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.