தமிழ்நாடு

ஆடி அமாவாசை: சுருளி அருவிக்கு பக்தர்கள் செல்லத் தடை; ஆற்றின் கரையோரங்களில் கூட்டம்

DIN

கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவியில் கரோனா தொற்றை முன்னிட்டு பக்தர்கள் செல்ல தடை விதித்ததால் முல்லைப் பெரியாற்றின் கரையோரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். தமிழக அரசு மக்கள் கூடும் இடங்களில் தற்பொழுது தடை விதித்துள்ளது. இந்த தடை சுருளி அருவிக்கும் பொருந்தும்.

இதனால் ஞாயிற்றுக்கிழமை சுருளி அருவிக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யச் சென்ற பொதுமக்களை ராயப்பன்பட்டி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் சுருளி அருவிக்கு சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

பின்னர் சுருளிப்பட்டி அருவி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் கரையில் முன்னோர்களை நினைத்து வழிபாடுகள் நடத்தி, அன்னதானம் வழங்கினர். முல்லைப் பெரியாற்றின் கரையோரங்களிலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT