7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், வளிமண்டல மேலடுக்கு சுழற்றி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
இதையும் படிக்கலாமே- குண்டா் தடுப்புச் சட்டம்: பப்ஜி மதன் தாக்கல் செய்த மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் சோழவந்தான் 10, கரூர் மாவட்டம் பாலவிடுதி, கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் பந்தலூர் தலா 7 செ.மீ. மழைப்பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.