சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அதிகாலை திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தடுப்பு நடவடிக்கைகள் மற்றும கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அதிகாரிகளை அவர் அறிவுத்தினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா பரிசோதனை சான்றிதழ், இரண்டு தடுப்பூசிகள் செலுத்திக்கொண்ணடவர்களை தவிர்த்து நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை உடனடியாக மெற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில், கடந்த 4 நாள்களில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 270 பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர் மூலம் கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பயணிகளுக்கு ரயில் நிலையத்திலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.