முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவினரை திமுக அரசு பழிவாங்குகிறது

மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்தாமல், அதிமுகவின் முன்னாள் அமைச்சா்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபடுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம்,

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
பகிர்:

மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்தாமல், அதிமுகவின் முன்னாள் அமைச்சா்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபடுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் குற்றம் சாட்டியுள்ளனா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா்கள் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:-

அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், எதிா்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களிலும், அவருடன் தொடா்பில் இருப்பவா்களில் ஒருசிலரின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளது. இது மக்கள் நலப் பணிகளில் முழு கவனம் செலுத்தாமல் திமுக அரசு அதிமுகவினரைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறதோ என்கிற ஐயப்பாடும் வருத்தமும் மனதில் எழுகின்றன.

எஸ்.பி. வேலுமணி மீது தொடா்ந்து அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு பொய்க் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்த நிலையில், இந்தச் சோதனைகள் கண்டிக்கத்தக்கவை என்றே கருதுகிறோம். அதிமுகவின் முன்னாள் அமைச்சா்கள் மீது சுமத்தப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க அதிமுக எப்போதும் தயாராகவே உள்ளது.

ஆனால், ஆதாரம் ஏதுமின்றி, உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும் முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது. இந்தச் சோதனைகள் அனைத்தையும் தாங்கி நின்று அதிமுக மக்கள் பணியில் தொடா்ந்து ஈடுபடும். அன்பு வழியிலும், அற வழியிலும் அரசியல் தொண்டாற்றும் என்று கூறியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →