தமிழ்நாடு

எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை; தொண்டர்கள் கூடியதால் பரபரப்பு

DIN

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 7 மணி முதல் சோதனை செய்து வரும் நிலையில், தமிழகத்தில் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான சிலரது வீடு உட்பட 52 இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதில் சென்னையில் மட்டும், 15 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அரசு ஒப்பந்தப்பணிகள் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1.20 கோடி மோசடி செய்து விட்டதாக எஸ்.பி வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சோதனை நடைபெற்று வரும் நிலையில் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி. வேலுமணி இல்லம் முன்பு குவிந்துள்ள அ.தி.மு.க. ஆதரவாளர்கள் தி.மு.க அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புசோதனை நடத்தி வரும் நிலையில், வீட்டு முன்பு அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT