முகப்பு
தமிழ்நாடு

கோவை வடவள்ளியில் உள்ள பொறியாளர் வீட்டில் சோதனை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், கோவை வடவள்ளி பகுதியில் உள்ள பொறியாளர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Updated On : 10 ஆகஸ்ட், 2021 at 1:58 PM
கோவை வடவள்ளியில் உள்ள பொறியாளர் வீட்டில் சோதனை
பகிர்:

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், கோவை வடவள்ளி பகுதியில் உள்ள பொறியாளர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

அதில் சென்னையில் மட்டும், 15 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அரசு ஒப்பந்தப்பணிகள் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1.20 கோடி மோசடி செய்து விட்டதாக எஸ்.பி வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

சோதனை நடைபெற்று வரும் நிலையில் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி. வேலுமணி இல்லம் முன்பு குவிந்துள்ள அ.தி.மு.க. ஆதரவாளர்கள் தி.மு.க அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.