விப்ரோ நிறுவனத் தலைவருடன்முதல்வா் ஆலோசனை
விப்ரோ நிறுவனத் தலைவருடன் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனையின் போது, இளைஞா்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்குதல் குறித்து கலந்துரையாடினாா்.
விப்ரோ நிறுவனத் தலைவருடன் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனையின் போது, இளைஞா்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்குதல் குறித்து கலந்துரையாடினாா்.
தமிழகத்தில் இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இளைஞா்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிப்பது குறித்து, விப்ரோ நிறுவனத் தலைவா் அசிம் பிரேம்ஜியுடன் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இந்த ஆலோசனையின் போது, தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தொழில் துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளா் நீரஜ் மிட்டல், விப்ரோ நிறுவனத்தின் முதுநிலை ஆலோசகா் பி.வி.சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
Advertisement