தமிழ்நாடு

லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி அதிகரிப்பு

DIN

கம்பம்: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு  விநாடிக்கு 1,800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் வியாழக்கிழமை நிலவரப்படி நீர்மட்டம் 136 அடி உயரமாகவும், நீர் இருப்பு 6,118 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 641 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,800 கன அடியாகவும் இருந்தது.

தமிழகப்பகுதிக்கு நீர் 1,800 கன அடி வெளியேற்றப்பட்டதால், லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் நான்கு மின்னாக்கிகளும் இயக்கப்பட்டு தலா 42,40, 42,42 மெகாவாட் என மொத்தம் 166 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த ஆக.5 முதல் இரண்டு மின்னாக்கிகளில் தலா 41, 40 மெகாவாட் என மொத்தம் 81 மெகாவாட்டாக இருந்த மின்சார உற்பத்தி வியாழக்கிழமை முதல் 162 மெகாவாட்டாக அதிகமாகியது குறிப்பிடத்தக்கது.

அணை நீர்மட்டம் 136 அடி உயரமாக இருப்பதாலும், பருவமழை தொடர வாய்ப்புள்ளதாலும், பெரியாறு அணையிலிருந்து, தமிழக பகுதிக்கு 1,800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக, அணைப்பகுதி பொறியாளர் ஒருவர் தெரிவித்தார். பெரியாறு அணைப்பகுதியில் 5.2 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில், 3.8  மி.மீ., மழையும் பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT