தமிழ்நாடு

மதுரை ஆதீனம் காலமானார்

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.  

DIN

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 
கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், மதுரை கே.கே.நகா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். 
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 77. 
மதுரை ஆதீனத்தின் 292ஆவது குருமகாசந்திநானமாக அருணகிரிநாதர் இருந்து வந்தார். சைவமுன், தமிழும் இரு கண்கள் என்று வாழ்ந்த பெருமைக்குரியவர் மதுரை ஆதீனம். 
மதுரை ஆதீனத்திற்குரிய 3 கோயில்கள் தஞசாவூர், திருவாரூரில் உள்ளன. தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்றாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 125 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆட்டமிழப்பு!

பூவிழி பார்வை... ஜனனி!

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிப்பு!

ராகுல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை - தேர்தல் ஆணையம்

மியான்மர் அதிபர் காலமானார்!

SCROLL FOR NEXT