தமிழ்நாடு

நிதிநிலை அறிக்கை மிகுந்த தொலைநோக்கு பார்வையோடு தயாரிக்கப்பட்டிருக்கிறது: கே.எஸ்.அழகிரி

DIN

நிதிநிலை அறிக்கை மிகுந்த தொலைநோக்கு பார்வையோடு தயாரிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்த்து ஏறத்தாழ 10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையோடு தி.மு.க. அரசு பொறுப்பேற்று, முதல் நிதிநிலை அறிக்கையின் மூலம் தமிழகத்தை தலைநிமிர வைக்கும் தொலைநோக்கு திட்டங்கள் ஏராளமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

தமிழக அரசின் திட்டங்களினால் தனிநபர்கள் பயனடைவதை விட ஒட்டுமொத்த மக்களும் பயனடைய வேண்டுமென்ற நோக்கத்தில் நிதிநிலை அறிக்கை மிகுந்த தொலைநோக்கு பார்வையோடு தயாரிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பயணத்தை மேற்கொண்டிருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினையும், அவரது நோக்கம் நிறைவேற பெரும் துணையாக இருக்கிற ஆற்றல் மிகுந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT