தமிழ்நாடு

சென்னையில் மூன்று இடங்களில் புதிய மேம்பாலங்கள்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

DIN

சென்னையில் புதிதாக மூன்று இடங்களில் மேம்பாலங்கள் ரூ. 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில்  2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

அப்போது சென்னை பெருநகர வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த பேசிய அவர், 

சுத்தமான, பசுமையான சென்னையை உருவாக்கும்பொருட்டு, சிங்கார சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும். 

சென்னையில் பொது இடங்களில் சுவரொட்டி இல்லாத நிலை உருவாக்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். 

சென்னையில் பாரம்பரிய கட்டடங்கள் பொலிவுற நடவடிக்கை எடுக்கப்படும். 

கணேசபுரம் சுரங்கப் பாதை , கொன்னூர் நெடுஞ்சாலை, தி. நகர் தெற்கு உஸ்மான் சாலை ஆகிய மூன்று இடங்களில் புதிய மேம்பாலங்கள் ரூ. 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதற்காக ரூ. 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை உத்தியின் மூலமாக 400 மிலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 

சென்னையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்துப் பகுதிகளிலும் ரூ. 2,056 கோடியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். 

ஆந்திரத்தின் கிருஷ்ணா நதிநீரை சென்னை நீர்தேக்கங்களுக்கு கொண்டுவர சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT