முகப்பு
தமிழ்நாடு

3 மணி நேர பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சர்

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் 3 மணி நேர பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் 3 மணி நேர பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். 

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் இன்று காலை தொடங்கியது. தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும். 

கூட்டத் தொடரில்  2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றினார். 

காலை 10 மணிக்குத் தொடங்கி சரியாக பிற்பகல் 1.02 மணிக்கு நிறைவு செய்தார். திருக்குறளில் உரையைத் தொடங்கி பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோருக்கு புகழாரம் சூட்டித் தொடங்கினார். 

அதுபோல இறுதியாக முன்னாள் நிதியமைச்சர்களை நினைவு கூர்ந்த அவர், நிதிநிலை அறிக்கையை தயார் செய்ய உதவிய தற்போதைய நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் இதர நிதித்துறை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். தனக்கு இந்த மாபெரும் பொறுப்பை வழங்கிய முதல்வருக்கும் நன்றி தெரிவித்தார். 

இதன்பின்னர் அவையை ஒத்திவைப்பதாக தெரிவித்த பேரவைத் தலைவர் அப்பாவு, மீண்டும் நாளை காலை 10 மணிக்கு பேரவை கூடும் என்று தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →