தமிழ்நாடு

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன்

DIN

தமிழகத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகளின் உதவியுடன் ரூ.5,500 கோடி கரோனா கால சிறப்பு கடன் உதவி உள்பட ரூ. 20,000 கோடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குக்கிராம அளவில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 2021-22- ஆம் ஆண்டில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்காக ரூ. 1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளூா் பணிகளை மக்கள் இணைந்து மேற்கொள்ளும் வகையில் ‘நமக்கு நாமே’ திட்டமும் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு 2021-22-ஆம் ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.20 ஆயிரம் கோடி கடன்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டம் புதுப்பிக்கப்பட்டு 36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் 2021-22 ஆம் ஆண்டில் இத்திட்டம் ரூ.809.79 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகளின் உதவியுடன் ரூ.5,500 கோடி கரோனா கால சிறப்பு கடன் உதவி உள்பட ரூ. 20,000 கோடி கடன் வழங்க உறுதி செய்யப்படும். தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் சீரமைக்கப்பட்டு 2021-22-ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.212.69 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT